ஜெய் ஸ்ரீமந் நாராயணா!! ஸ்ரீ: ஜெய் ஸ்ரீமந் நாராயணா!!

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ வேங்கடாத்ரி ஸத்குருப்யோ நம:
 

ஸ்ரீமத் பரமஹம்ஸ திருவேங்கட ராமாநுஜ ஜீயர் எனும் ஸ்ரீமான் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமியின் வாழித்திருநாமம் மற்றும் திவ்ய சரித்திரச்சுருக்கம்

வாழித்திருநாமம்

ஸ்அத்திகிரியருளாளன் அடிபணிந்தோன் வாழியே !
ஆளவந்தார் ஸ்ரீ சூக்தி அனுஷ்டித்தோன் வாழியே !
பக்தியுடன் ஆபரணம் பரந்தளித்தோன் வாழியே !
பகல் திரு மாலைகள் தம்மை படைத்திட்டோன் வாழியே !
சித்தசுத்தியைப் பெற்ற சிறப்புடையோன் வாழியே !
ஸ்ரீ ரங்க நாராயண ஜீயரென்பான் வாழியே !
இத்தரையில் பங்குனியில் உத்திரத்தோன் வாழியே !
எழில் திருவேங்கட ராமாநுஜ ஜீயர் வாழியே !

திவ்ய சரித்திரச்சுருக்கம்

ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவேயுடைய மஹா பக்த சிரோமணிகளும், பக்தி ஸாஹித்ய கர்த்தாக்க்ளுமாய் விளங்கிய ஸ்ரீபத்ராசல ராமதாஸர், ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி பொன்ற மஹா யொகிகளின் வழியிலே ஞான – பக்தி – வைராக்ய சிகாமணியாய் விளங்கியவர் ஸ்ரீமான் அல்லூரி வேங்கடாத்ரி ஸ்வாமி. ஈவருடைய அபிமான தெய்வம் தேவராஜனான ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆவார். பக்தி சுவை மிக்க இவருடைய பாடல்கள் தான் இன்று தமிழகம் முழுவதும் டெலுங்கு பஜன கோஷ்டிகளால் பாடப்பட்டு வருகின்றன. இன்றைய மதிப்பில் பல கோடி ரூபாய் பெறுமான திருவாபரணங்களை ஸ்ரீ காஞ்சி பேரருளாளப் பெருமாளுக்கும், ஸ்ரீ ரங்கம் நம்பெருமாளுக்கும் உபயநாச்சிமார்களுக்கும் ஸ்ரீ பெரியபிராட்டியாருக்கும் சமர்ப்பித்ததோடு, மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர், ஸ்ரீ கடன்மல்லை ஸ்தலஸயனம், ஸ்ரீ காஞ்சி தீபப்ரகாசர் ஸந்நதி, நெல்லூர் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி திருக்கோயில், ஆகிய திவ்யதேசங்களிலும் மகத்தான ஆலய திருப்பணி கைங்கர்யம் செய்துள்ளார், இவற்றுக்கெல்லாம் மூலதமாகக் கொண்டது. “ஸ்ரீ ஹரிநாம ஸங்கீர்த்தனமே” யாரும் இவரது திவ்ய சரித்திரத்தின் சுருக்கம் இங்கே குறிக்கப்பட்டுள்ளது.

அவதாரம்: கலியுகாதி வருஷம் 4907 கி.பி 1806 அக்ஷய வருடம் பங்குனி – உத்திர நட்சத்திரம் – பகல் 2.30 மணி விருச்சக லக்னம் திங்கட்கிழமை
பெற்றோர்:
தந்தை - ஸ்ரீமான் வெங்கய்யா
தாயார் – ஸ்ரீமதி வெங்கம்மா
குலம்: ஆருவேல நியோகி குலம், பாரத்வாஜ கோத்திரம்
இடம்: ஆந்திர பிரதேசம் – கிருஷ்ணா மண்டலம் ஜுஜ்ஜுரு பரடால தாலுகா சமீபமான அல்லூர் குக்கிராமம்
ஸ்ரீராம தாரக மந்த்ர உபதேசம் செய்த குரு:
ஸ்ரீமான் தூமுநரஸிம்ஹதாஸ ஸ்வாமி கி.பி 1816 தாதுரூ
ஸ்வாமி வேங்கடாத்ரியின் வயது – 10 ஆண்டுகள்
பத்ராசல பிரவேசம்: கி.பி 1819 – 23 பஹுதான்ய வருடம் 12 வயதில் அருளிய முதல் கவிதை – ‘ஸரனு ஸரனு ஸரனு ஸ்ரீராம ராம ராமச்சந்த்ரா’
ஸ்ரீ ராம கோடி எழுதி ஸமர்ப்பித்தது ஸ்ரீராம கைங்கர்யம்
ஸ்ரீதிருமலை ப்ரவேசம்: கி.பி. 1824 – தாரண வருடம் ஸ்ரீ திருவேங்கடமுடையான் மீது ‘பங்கேருஹ சரணா பரமபுருஷ’ , ‘ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி இந்து ராரா’ கீர்த்தனங்கள்.
ஸ்ரீ காஞ்சி ப்ரவேசம்: வியய வருடம் கி.பி 1826 ஸ்வாமிக்கு 20 வயது ஸ்ரீதுளசீ – புஷ்பகைங்கர்யம், ஸர்ப்பம் தீண்டிய விஷத்தை பஜனை செய்து முறித்துக் கொண்ட விந்தை! தாசியை திருத்தியது விஷம் கலந்த பிரசாதத்தை பெருமான் நிராகரித்த அற்புதம்.
சென்னை ப்ரவேசம்: ஸ்ரீ காஞ்சி பேரருளாளனுக்கு “வைரமுடி செய்வதற்கான கைங்கர்யம் பொருட்டு சென்னையிலே பஜனங்கள் மூலம் பொருள் ஈட்டியது மன்மத வருடம் கி.பி. 1835
ஸ்ரீ காஞ்சி பேரருளாளனுக்கு வைரமுடி சமர்ப்பணம்:
கி.பி 1858 காளயுக்தி வருடம் – வைஸாக பௌர்ணமி. இதுவே இன்றும் ஸ்ரீ வேங்கடாத்ரி கொண்டை என போற்றப்படுகிறது. பங்குனி உத்திரம், பிரஹ்மோத்ஸ்வம் முதலான முக்கிய நாட்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.
ஸ்ரீ உபயனாச்சிமார்களுக்கு வைரமுடி சமர்ப்பணம்:
துந்துபி வருடம் கி.பி 1802 கார்த்திக சுத்த பௌர்ணமி.
பஞ்ச சமஸ்க்காரம்:
காஞ்சி ஸ்ரீ அருளாளப் பெருமாளின் திருவாக்ஞைகிணங்க ஸ்ரீ காஞ்சி : வாதிகேஸரி அழகிய ஆண்டுகள் மணவாள ஜீயரிடம் ‘ஸமாஸ்ரேயணம் திருமந்த்ர உபதேசம் பெற்றார். (வயது 56) கி.பி 1860. ‘குஞ்சர வர்துனிபாத கஞ்ஜமுலனு நம்மராதா (ஆனந்த பைரவி) ‘ மந்த்ராஜம்’ என திருமந்த்ரத்தை கொண்டாடுகிறார்.
ஸ்ரீ ரங்க ப்ரவேசம்:
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு பாண்டியன் கொண்டை சமர்ப்பணம்:

கி.பி 1863 ருத்ரோத்காரி வருடம், மார்கழி மாதம் முக்கோடி ஏகாதசி திருநாள் ஸ்ரீரங்கம் ஸ்ரீ தாயார், உபய நாச்சியார்களுக்கு ‘ராஜமுடி’ – ஸ்ரீரங்கநாயகி தாயாருக்கு ராஜமுடி, சாயகொண்டை சமர்ப்பணம் ரக்தாக்ஷி 1864.
ஸ்ரீரங்கநாதனுக்கு மகரகண்டி சமர்ப்பணம்:
கி.பி 1866 பிரபவ ஆவணி அஷ்டமி ரோகிணி
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோயில் விமான கைங்கர்யம்:
இன்றைய மதிப்பீட்டில் பல கோடி ரூபாய் பெறுமான கோயில் விமான கைங்கர்யம்.
துறவறம் பூணுதல்:
கி.பி 1868 விபவ வருடம் மாசி மாதம் பௌர்ணமி வயது 62 ஆண்டுகள் (மாசி மகம்) வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயரிடம் சன்யாசம் மேற்கொண்டார்.
ஆங்கிலேய கவர்னரால் பாராட்டப்படுதல்:
கி.பி 1876 மேதகு நேப்பியார் பிரபு (Governor of Madras) ஸ்வாமிகளை பார்த்து ‘தாங்கள் ஏசு கிறிஸ்துவைப் போலி தோன்றுகிறீர்! என்று போற்றியது.
திருநாடு அலங்கரித்தல்:
ஸ்ரீ நம்பெருமாள் திருவாக்கின்படியே கி.பி. 1877 தாது வருடம் கும்ப (மாசி) மாதம் க்ருஷ்ண ஸப்தமி, திங்கட்கிழமை நள்ளிரவு. அப்பொழுது ஸ்வாமிக்கு 71 வயது பூர்த்தியாகிரது.
திருவரசு: கொள்ளிடக்கரை, உடையவர் தோப்பு, ஸ்ரீ ஆளவந்தார் படித்துறையில், யதிகளின் திருவரசுள்ள இடத்தில்.
ஸ்வாமிகளின் முக்கிய சிஷ்யர்கள்:
1. மாம்பலம் ஸ்ரீ ஆதிநாராயண தாஸர்
2. அன்னலூர் ஸ்ரீ நாராயண தாஸர்
3. ஸ்ரீ ராமசந்தரய்ய தாஸர்
4. ஸ்ரீ தநால. தேவராஜ ஸ்வாமி
5. ஸ்ரீ புஷ்பால ராமதாஸர்
6. ஸ்ரீ வரகவி நரஸிம்ஹ தாஸர்
7. ஸ்ரீ கொத்தயிம்டி. துளஸி தாஸர்
8. ஸ்ரீ கண்டா ராமாநுஜ தாஸர்
9. மயிலை. ஸ்ரீ ஆதிநாராயண தாஸர்
10. புதுவை ஸ்ரீ நாராயண தாஸர்
11. தேவேந்திரபுரம் ஸ்ரீ நாராயண தாஸர்
12. காஞ்சி ஸ்ரீ மணவாள தாஸர்
13. கட்டா. ஸ்ரீ ராமதாஸர்
14. கம்டி. ஸ்ரீ நாராயண தாஸர்
15. சென்னை ஸ்ரீ நரஸைய்ய தாஸர்
16. ஸ்ரீநிவாஸபுரம் ஸ்ரீவேணுகோபால தாஸர்

ஸ்வாமிகளுடன் திருவாபரண கைங்கர்யங்களை நிறைவேற்றிய ஸத்புருஷர்கள்:

ஸ்ரீ காஸி தாஸ் சேட் – கல்கட்டா,
ஷெரீப். ஸ்ரீ வெங்கடஸ்வாமி நாயுடு – சென்னை
துபாஷ். பசுபுலேடி ஸ்ரீ ராமாநுஜுலு நாயுடு – சென்னை
ரொட்டல ஸ்ரீ மணவாள நாயுடு – சென்னை
ஸ்ரீ கோவர்த்தன ரங்காச்சாரிய ஸ்வாமி – பிருந்தாவனம்

ஸ்ரீ வேங்கடாத்ரி ஸ்வாமி திருவடிகளே சரணம் !!!