ஸ்ரீ:

ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேத ஸ்ரீ வரதராஜ பரப்ர்ஹ்மணே நம:

ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ வேங்கடாத்ரி ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஸங்கீர்த்தன ஆலயம்

பெருமை மிகு புண்ணிய பூமியான நம் பாரதத் திருநாட்டில், ஸ்ரீ மந் நாரயணின் திவ்ய சரணாரவிந்தங்களையடைய ஒரே ஸாதனம் ஸ்ரீ ஹரி நாம ஸங்கீர்த்தனமே.

நம் ஸத்குரு ஸ்ரீ மாந் பீதாம்பர ஸ்ரீநிவாஸ ராமாநுஜதாஸ ஸ்வாமிகளின் திவ்யாக்ஞையின்படி, ஸ்ரீ வேங்கடத்ரி வரதப்ருந்த வாஸனுக்கு திருகோயில் அமைத்து நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளை பரப்பு வேண்டும் என்றபடி திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்ரீ வேங்கடாத்ரி ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஸங்கீர்த்தன ஆலயம் நூதன நிர்மாணம் செய்து, ஸ்ரீ பெருந்தேவி, ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ வேங்கடாத்ரி ஜீயர், நூதன விக்ரஹங்களை எழுந்தருளச் செய்து, ஸ்ரீ ஹரி பஜன ஸம்பிரதாயப்படி திருவாராதன, உத்ஸவாதிகள், சிறப்பாக நடைபெறவும், பகவந் நாம சங்கீர்த்தனம் ஒன்றே இக் கலியுகத்தில் கவலைகளையும், தோஷங்களையும், நோய்களையும் தீர்த்து, ஸகல ஐஷ்வர்யங்களையும் தரவல்லது என்ற ஆழ்வார், ஆசார்ய, தாஸஸ்ரேஷ்டர்களின் அருள்வாக்கிற்கிணங்க, “ஸ்ரீ வேங்கடாத்ரி ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஸங்கீர்த்தன ஆலயம்” நிர்மான திருப்பணியில் சபை போஷகர்களும், ஆன்மீக கனதனவான்களும் நிர்வாகிகளும், பக்த, பாகவத சிகாமணிகளும் கூடியிருந்து, பரம உத்தமமான இக் கைங்கர்யத்தை விரைவில் பூர்த்தி செய்வித்து ஸ்ரீ பகவத், ஆச்சார்ய, ஸத்குரு திருவருளால் இன்புற்று நல்வளங்கள், நலங்களுடன், குலக்கொழுந்துகளுடன் பல்லாண்டு! பல்லாண்டு! வாழ பிரார்திக்கின்றோம்.

தலைவர்

ஸ்ரீமாந் ஸத்குரு பீதாம்பர
ஸ்ரீநிவாஸ ராமாநுஜதாஸர்
ப்ரிய சிஷ்யர்
M.C. ராகவ ராமாநுஜ தாஸர்
 

ஸ்ரீ பாகவத பாத தூளி, அடியேன்
ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ த்ரிதண்டி,
ஸ்ரீமந் நாரயண ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமி
திருவடி சம்பந்தம் உடையவரும்,
ஸ்ரீ மாந் பீதாம்பர
ஸ்ரீநிவாஸ ராமாநுஜ தாஸர் திருக்குமாரருமான
பீதாம்பர வேங்கட வரத ராமாநுஜ தாஸன்